Thursday, February 09, 2012

சில்லரை வணிகம்-உள்குத்துகள்


இதை ஏன் எதிர்க்கிறார்கள்.கொஞ்சம் பாக்கலாமா? வாங்க.,
முதல் பதிவில் சொன்ன அமைப்புசாரா தொழில்,அதுதாங்க நுகர்வு சங்கிலி,இதை ஒட்டுமொத்தமா சில்லரை வணிகம் அழிச்சிடும்,அப்படின்னு குற்றச்சாட்டு,அது உண்மையா அப்படின்னா? இல்ல,அழிக்காது,ஆனா வலுவிழக்க செய்யும். சரி இந்த வணிகர்கள் சங்கம் இத ஏன் இவ்வளவு வலுவா எதிர்க்கிறாங்கன்னா,வணிகர் சங்கங்களை பொருத்தவரை முக்குகடை அண்ணாச்சி கூட அதுல உறுப்பினரா இருந்தாலும்,பொறுப்புல இருக்குற எல்லாரும் அந்த இரண்டாவதா சொன்ன இடைத்தரகர்கள் தான்.அடி மடியில் நேரா கைய்ய வச்சா கத்த மாட்டாங்களா என்ன? அப்படி ஒரு பிரிவையே இந்த பேரங்காடிகள்(walmart மாதிரி கடைகள்) ஒழிச்சிடும்.இது உடனடி நிகழ்வா இருக்கும்.அதுனாலதான் இவ்ளோ சத்தம். அதுக்காக நல்லதுதானே என்று நினைக்காதீங்க,படிப்படியா என்ன நடக்கும்னு யோசிச்சா பயமா இருக்கும்(முல்லை பெரியாறு உடைந்தா என்னவெல்லாம் நடக்கும்னு சேட்டன்கள் போடுற பட்டியல விட கிலியேற்படுத்தும்) ஆனா அது எல்லாம் நடக்கலாம். அனுமானம்தான்.நடக்கலாம்.

சரி என்னன்னு பாப்போம்.
1.இந்த சிறு சிறு மளிகை கடைகள் காணாமல்போய்விடும்.(அவ்வளவு சீக்கரம் ஏதுமாகாது,ஆனா ஒரு 50 வருட இடைவெளியில் நடக்க சாத்தியம் உள்ளது.50 வருடம்னா ஒன்னரை தலைமுறை இடைவெளி)
2.வேலைவாய்ப்பு பல மடங்கு குறையும்(கிடையாது,அதிகரிக்கும்,ஆனா குறுப்பிட்ட காலத்திற்கு பிறகு அதிகரக்காம நின்றுவிடும்,அது மட்டுமில்லாம,இப்ப சொந்த தொழில் செய்யும் நிறைய பேர் வேலைக்கு போக நேரும்,ப்ளஸ் இப்போ வேலையில் கிடைக்கிற திடீர் வருமானம்/வருமானமின்மை இல்லாமல் மாத சம்பள வேலையாட்களா உருமாறுவாங்க)
3.விவசாயம் அழியும்(கிடையாது,மாறா ஒரு ஊர் முழுக்க ஒரே பொருள் உற்பத்தி செய்யப்படலாம்,விவசாயிகள் கூட நீண்ட கால ஒப்பந்தம் போடபட்டு,விளைச்சளை மையப்படுத்திய விவசாயம்.,மூலப்பொருள் உரம் எல்லாம் கொடுத்து,டார்கெட் எடுக்க சொல்லுவான்.கொஞ்சம் கொஞ்சமா நிலம் வாங்கி அவனே விவசயம் கூட பண்ணலாம்,ஆனா கொஞ்சம் டைம் ஆகும்,.இப்படி நடந்தா விவசாயி அழியலாம் விவசாயம் அழியாது + loyal customer என்ற அடிப்படையில் கொள்முதல் பண்ணுவாங்க,அதனால விவசாயி இப்ப ஓரு ஆள்கிட்ட வித்துட்டு அப்புறம் இன்னொருவன்கிட்ட போக முடியாது,உதாரணமா reliance polyester fabric வாங்குபவர் பட்டியல் அவன்கிட்ட இருக்கு,சந்தை நிலவரத்துக்கு ஏற்ப உங்க கொள்முதல் இருக்கா,குறையுதா என ட்ராக் பண்ணுவான்,வேற யர்கிட்டயாவது வாங்குனா அப்புறம் அவன்கிட்ட கெஞ்சனும்)
4.தரம் அதிகரிக்கும்,இழப்பு குறையும்(உண்மை,கட்டமைப்பை மேம்படுத்தி,அவனோட உலக அனுபவத்த பயன்படுத்தி இழப்பை குறைப்பான்)
4,விலை குறையும்(சாத்தியமில்லை,மத்த வியாபாரிகள் இருக்கும் வரை சந்தை விலைக்கு நிகரா,தரம்,ஏஸி,கட்டமைப்புக்கு ஏத்தபடி கொஞ்சம் அதிக விலையில் விற்பான். கிராம் கணக்கில் விலை,கிலோ கணக்கில் இருக்காது.இப்ப கூட ரிலையன்ஸ்ல அப்படித்தான். சரி, குறைவான விலையில் விற்பான் அப்படின்னு இன்னும் வாதாடுறீயளா,சாத்தியம்தான்,ஆனா என்ன நடக்கும்,இவன் கூட போட்டி போட முடியாமா நடு/சிறு வியாபாரிகள் கொஞ்சம் கொஞ்சமா காணாம போவாங்க)
5.இவன் கடை திறப்பதால் ரியல் எஸ்டேட் பிஸினஸ் சூடுபிடிக்கும்,நடுத்தர வர்க்க வீடு கனவு எட்டா கனியாகும்.(புரியலையா?  walmart பக்கத்துல சைட் சார், செம ரெஸிடன்டல் ஏரியா.சதுர அடி 6000ரூவா தான்.எப்புடி? 10000 பேர் இருக்குற ஏரியாவுக்கு ஒருத்தன் கடை திறந்தாலும் எல்லா ஏரியாவும் கவர் ஆயிடும்.மாத சம்பளக்காரன் எப்படி வீடு வாங்குறது.பேருந்து கட்டண உயர்வுக்கே சம்பளம் ஏத்தி கேக்க முடியல,இதுல இது வேறயா? வாடகையும் ஏத்துவாங்கங்குறத தனியா சொல்லனுமா?)
6.அவனோட வெளிநாட்டு பிராண்ட் பொருள்கள் விற்பனை உள்ளூர் சின்ன சின்ன உற்பத்தியாளர்களை முடக்கலாம்(உண்மை,மிளகாய்பொடி,மல்லிப்பொடி எல்லாம் அவன் பிராண்ட் விக்க ஆரம்பிச்சா,டொரிணோ.பொவோண்டா காணமா போன மாதிரி,சக்தி மசாலா,ஆச்சி மசாலா காணம போகும் சாத்தியம் உண்டு.இதுனால ஏற்படும் வேலையிழப்பு எங்கே ஈடுசெய்யப்படும் என தெரியவில்லை,சந்தை பொருளாதாரத்துக்கு அதை சரிசெய்யும் அந்த தன்மை உண்டு என்றாலும் நேரம் பிடிக்கும்.)
7.சேமிப்பு சார் பொருளாதாரமான இந்தியா செலவு சார் பொருளாதாரமா மாறும்(உண்மை, முன்பெல்லாம் மளிகை கடையில் பொருள் வாங்க போகும் போது சிட்டை எழுதிட்டு போய்,வேண்டியதை
வாங்கிட்டு வருவோம்,இப்ப சூப்பர் மார்க்கெட் போகும் போது, வாங்கிட்டு வர பொருள்களில் 60% கடையில் அதை பார்த்த பிறகே வாங்க முடிவு செய்றோம்.அந்த 60% ல 30 % பொருள்கள் இல்லாமலே கூட இருக்க இயலும்.தேவையற்றதுன்னு சொல்லல தேவையை மீறிய பொருட்கள் அவை)
8.வரி ஏய்ப்பு ஒழிக்கப்பட்டு அரசாங்க வருமானம் அதிகரிக்கும்.ஏன்னா எல்லாமே billed transaction(இல்லை,எல்லா லெவல்களிலும் வெகு எளிதா வரியேய்ப்பு செய்ய முடியும் என்பது  ஊரறிந்த உண்மை.எப்படின்னு கேட்டா அதுக்கு தனியா ஒரு பதிவுதான் போடனும்)
9.எல்லாத்துக்கும் மேல இங்க சம்பாதிக்கும் எல்லாமே இங்க முதலீடு செய்யபடாது.பாதிதான்.மீதி பணம் அவன் நாட்டுக்கு போகும்(உண்மை,அப்படி போகிறது,இராத்திரி தூங்காம ஃபோன் பேசி வெளிநாட்டுல இருந்து வாங்கிய சம்பளம்தான். அங்கயே திரும்பி போகும்.I mean அந்நிய செலாவனி, நாம வெறும் மார்க்கெட் என்ற அளவிலேயே அறியப்படுவோம்)
400 வருடத்துக்கு முன்னாடி கப்பல்ல வந்த ஒரு மக்கள் குழுவினர், குஜராத் சூரத் கடற்கரையில் இறங்கி  அங்கிருந்து டெல்லி போய் இந்த நிலப்பரப்புல வியாபாரம் செய்ய அனுமதி கேட்டாங்க, அப்பறம் ஒரு 150 வருடம் கழித்து உள்ளூர்காரங்க வியாபரம் செய்ய அவுங்க கிட்ட அனுமதி கேட்க வேண்டி வந்தது.150 வருடம் என்பது தோராயமா நாலேகால் தலைமுறை!
இப்ப இருக்குற விஞ்ஞான வளர்ச்சியில் உலகம் வேகமா சுத்துதுன்னு சொன்னாலும் தகும். உங்க இரண்டாவது தலைமுறை எப்படி இருக்கும்னு உங்களுக்கு தெரியகூடிய சாத்தியம் இப்ப இருக்கு. அதுக்கு கொஞ்சம் 'நிறையவே' யோசிக்கனும்
ஓட்டைய அடைச்சா எந்த கப்பலையும் எந்த கடல் மேலையும் ஓட்டலாம்.ஆனா நம்ம வரலாற திரும்பி பார்த்தா...பார்த்தா...
அட போங்கப்பா...
இப்ப இவ்ளோதான்,இன்னும் கேள்வியிருந்தா கேளுங்க பதில் சொல்றேன். கை வலிக்குது.
-எடு சாட்டை

1 comment:

  1. கிட்டத்தட்ட இதே கருத்துடைய இன்னொரு பதிவு
    http://www.inneram.com/articles/readers-articles/retail-vs-retail-politics-6258.html

    ReplyDelete